
மீண்டும் ரீ-ஷூட் செய்யப்படும் கோல்டு
இந்த படம் ஓணம் பண்டிகைக்கே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பட வெளியீட்டில் தாமதம் ஏற்படும் என அல்போன்ஸ் புத்ரன் கூறியிருந்தார். அதுகுறித்து அவர் விளக்கம் அளித்தபோது ரசிகர்களுக்கு நல்ல ஒரு படைப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தாமதம் என்றும் படத்தில் விஎப்எஸ் பணிகள் நிறைய இருப்பதால் இந்த தாமதம் அவசியமானதே என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தில் எடுக்கப்பட்ட சில முக்கியமான காட்சிகள் எடிட்டிங்கில் பார்த்தபோது அல்போன்ஸ் புத்ரனுக்கு திருப்தி அளிக்காததால் மீண்டும் அந்த காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளாராம். அந்த காட்சிகளில் பிரித்விராஜுடன் நயன்தாராவும் நடிக்க வேண்டியிருப்பதால் அது குறித்த தேதிகளை முடிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அந்த காட்சிகளை மீண்டும் படமாக்கிய பின்னரே படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ மறு அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!