
பாவனாவின் மலையாள படப்பிடிப்பு நிறைவு
இந்த நிலையில் மீண்டும் முன்புபோல மலையாளத்தில் கவனம் செலுத்தி சில படங்களில் நடித்து வருகிறார் பாவனா. அப்படி அவர் நடித்து வந்த ‛என்டிக்காக்காகொரு பிரேமந்தார்னு" என்கிற படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதுபற்றிய தகவல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது இந்தப் படத்திற்கு ஆறு மாதங்களாக பிரீ புரொடக்சன் பணிகள் நடைபெற்று, 60 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்றது என்றும் கூறியுள்ளனர். மேலும் 12 லொகேஷன்களில் நான்கு கட்ட படப்பிடிப்புகளாக சுமார் 820 மணி நேரம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றும் 160 தொழில்நுட்ப குழுவினருடன் இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!