
அதிர்வுகளை ஏற்படுத்திய அபர்ணா பாலமுரளியின் வாக்குமூலம் : பரபரக்கும் இனி உத்தரம் டிரைலர்
அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் "இனி உத்தரம்". இந்த படத்தில் நடிகர் ஹரீஷ் உத்தமன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தை சுதீஷ் ராமச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் தற்போது டிரைலர் வெளியாகி உள்ளது. முதல் காட்சியிலேயே காட்டுக்குள் இருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் அபர்ணா பாலமுரளி, தான் ஒருவரை கொன்று விட்டதாக கூறி போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைக்கிறார்.
டிரைலரில் வெளியான காட்சிகளின்படி அவர் தனது பாய்பிரண்டை கொன்றுவிட்டதாக புரிந்துகொள்ள முடிகிறது. எதற்காக அவர் கொலை செய்தார் என்பதை போலீஸ் அதிகாரியான ஹரீஷ் உத்தமன் விசாரிப்பது போன்றும் அரசியல் அளவில் அபர்ணாவின் இந்த வாக்குமூலம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் அந்த டிரைலர் விறுவிறுப்பாக தயாராகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!