
காமெடி நடிகர் படத்தை கிடப்பில் போட்ட துல்கர் சல்மான்
பிரபல மலையாள காமெடி நடிகரும், துல்கர் சல்மானுடன் பல படங்களில் நண்பராக நடித்தவருமான சௌபின் சாஹிர் டைரக்சனில் ஒதிரம் கடகம் என்கிற படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த வருடம் துல்கர் சல்மானே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒதிரம் கடகம் படத்தை தற்சமயம் நிறுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார் துல்கர் சல்மான். தான் சமீபத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சில படங்களின் கதையும் இந்த படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே சாயலில் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சிறிது காலம் கழித்து இந்த படத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
நடிகர் சௌபின் சாஹிர் சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மானை வைத்து "பறவ" என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!