
ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த கடுவா
அந்த வகையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியான கடுவா திரைப்படம் வெற்றிகரமான படமாக அமைந்து விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட படம் வெளியாகி 25 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த படம் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
இன்னும் பல தியேட்டர்களில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல சமீபத்தில் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பாப்பன் திரைப்படமும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டத்தை வரவழைத்துள்ளது. அந்தவகையில் மலையாள திரை உலகம் தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளது என்று சொல்லலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!