
பாரோஸ் படப்பிடிப்பை முடித்த மோகன்லால்
போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பாரோஸ் என்கிற பாதுகவாலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடித்துள்ளார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். கடந்த வருடம் மார்ச் மாதம் துவங்கிய படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் நடைபெற்று தற்போது சென்னையில் நடைபெற்று வந்த அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த வருடமே இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறாராம். மோகன்லால்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!