
நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர்
இந்த படம் வெளியாவதற்கு சிலநாட்கள் முன்னதாக ராஜசேகர் மீதும் அவர் மனைவி ஜீவிதா மீதும் பைனான்சியர் ஒருவர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சேகர் படம் வெளியாவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட பைனான்சியருக்கு அவரது பணத்தை செட்டில் செய்வதாக ராஜசேகர் ஜீவிதா தம்பதியினர் கூறியிருந்தனர் ஆனால் பணத்தை செட்டில் செய்யாமலேயே படத்தை ரிலீஸ் செய்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பைனான்சியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவே தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் சேகர் படத்தை ஞாயிறு மதியம் முதல் மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து டாக்டர் ராஜசேகர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் இந்த படம் எனது வாழ்க்கையில் மிக முக்கியமான படம். ரசிகர்களிடம் இதற்கு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. விரைவில் இந்த படம் மீண்டும் ரசிகர்களின் பார்வைக்கு வரும் என நம்புகிறேன் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!