
68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர்
ஆம்.. "சாண (சாணை) என்கிற படத்தை இயக்குவதுடன் அந்தப்படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். ஒருமுறை சாணை தீட்டுபவர் ஒருவரை அருகில் இருந்து கவனித்த பீமன் ரகுவுக்கு, அவர்களது வேலை ஏதோ ஒரு விதத்தில் பிடித்துப்போய் விட்டது. தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக சாணை பிடிக்கும் தொழிலாளர்கள் பலரின் வாழ்க்கை முறையை கவனித்த பீமன் ரகு, இவர்களின் வாழக்கையை படமாக்க முடிவு செய்து, தானே நாயகனாகவும் இயக்குனராகவும் மாறிவிட்டார்.
இதற்காக ஒரு கட்டத்தில் தனது வீட்டிலேயே சாணை பிடிக்கும் மிஷினை வாங்கி வந்து பயிற்சியும் எடுத்துள்ளார். சாணை பிடிக்கும் தொழில் அவ்வளவு எளிதானது அல்ல என்று கூறும் பீமன் ரகு, தென்காசியில் இருந்து பிழைப்புக்காக கேரளாவுக்கு குடிபுகும் ஒரு சாணை தொழிலாளியின் வாழ்க்கையை யதார்த்தமாக படமாக்கியுள்ளாராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!