
சிபிஐ ஐந்தாம் பாகம் ஞாயிற்றுக்கிழமை ரிலீஸ் ஏன் ?
பொதுவாக தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்கள் ஞாயிறு அல்லது திங்களில் வந்தாலும்கூட அதை முன்னிட்டு முன்கூட்டியே வியாழன் அல்லது வெள்ளியில் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில் மே 1ம் தேதி அன்று தான் இந்த படம் வெளியாக வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் சனிக்கிழமை விடுமுறையும் கூட கணக்கில் கொள்ளாமல் ஞாயிறன்று பணத்தை ரிலீஸ் செய்கின்றனராம்.
அதுமட்டுமல்ல மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள ஜனகணமன திரைப்படமும் தமிழில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் வெள்ளி, சனிக்கிழமைகளில் அதிக அளவில் தியேட்டர்களை பகிர்ந்து கொள்வதால் சிபிஐ 5 ; தி பிரெய்ன் படம் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் நிறைய காட்சிகளுடன் வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!