மம்முட்டியின் கிளாசிக் படம் ‛சிபிஐ". கடந்த 34 ஆண்டுகளில் இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. தற்போது ஐந்தாம் பாகம் ‛சிபிஐ 5 தி பிரைன்" என்ற பெயரில் தயாராகி உள்ளது. முதல் நான்கு பாகங்களை இயக்கிய கே.மதுவே இந்த படத்தையும் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்சாரில் யு/ஏ சான்று பெற்றுள்ள இந்த படம் மே 1ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவலை நடிகர் மம்முட்டி வெளியிட்டுள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!