
கோப்ரா நடிகருக்கு அஜய் ஞானமுத்து புகழாரம்
இது ஒரு பக்கமிருக்க தமிழில் அஜய் ஞானமுத்து டைரக்சனில் விக்ரம் நடித்துவரும் படம் "கோப்ரா" படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில், ரோஷன் மேத்யூ நடித்துள்ளார். முதலில் இந்த கேரக்டரில் மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் என்பவர் தான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அவர் மலையாளத்தில் தயாரிப்பாளர் ஒருவருடன் மோதல் போக்கை கடைபிடித்து, ரெட்கார்டு போடும் அளவுக்கு பிரச்சனை பெரிதானதால், அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ரோஷன் மேத்யூ. ஒப்பந்தம் ஆனார்.
தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ரோஷன் மேத்யூவின் நடிப்பு குறித்து சிலாகித்து பதிவிட்டுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. “ரோஷன் மேத்யூ.. உங்களைப் போன்ற வரமாக கிடைத்த நடிகருடன் பணி புரிந்தது இனிமையான அனுபவம்.. நிஜமாகவே நீங்கள் அற்புதமான மனிதர். உங்களுடைய காட்சிகளை திரையில் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அஜய் ஞானமுத்து

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!