
ஹரிஹர வீர மல்லு ஸ்க்ரிப்ட்டில் கவனம் செலுத்தும் பவன் கல்யாண்
இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சுமார் 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் நிலைமை சரியான பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
அந்தவகையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் மீண்டும் துவங்கப்பட உள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்ய சொன்ன பவன் கல்யாண் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பாக ஒருமுறை ஸ்கிரிப்ட் முழுவதையும் படித்து பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் இயக்குனர் க்ரிஷ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!