
கோவில் பூசாரியான மலையாள வில்லன்
74 வயதான பாபு நம்பூரி தற்போது சினிமாவில் இருந்து விலகி கோட்டயம் குரவிலங்காடு பகுதியிலுள்ள கணபதி கோயிலில் பூசாரியாகவும் பணியாற்றுகிறார். பல ஆண்டுகளாக வோவிலின் வராதபோது, பூசாரி பொறுப்பை ஏற்று நடத்திய பாபு நம்பூதிரி இப்போது முழுநேர பூசாரி ஆகிவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்கள் குடும்பமே இறைவனுக்கு சேவை செய்யும் நம்பூதிரி குடும்பம். நான் பள்ளியில் படிக்கும்போதே பூஜைகள் பற்றி தெரிந்துகொண்டேன். நம்பூதிரி சமூகத்தில் இப்போது சிலருக்கு பூஜைகள் செய்ய தெரிகிறது. ஆனால், அடுத்த தலைமுறைக்கு இதில் விருப்பம் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!