
நடிகர் சங்க தலைவராக மோகன்லால் தேர்வு : துணை தலைவர் ஆஷா சரத் தோல்வி
ஆனால் துணைத் தலைவர்கள் பதவிக்கும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் தேர்தல் நடந்தது. 2 துணை தலைவர் பதவிக்கு மோகன்லால் அணி சார்பில் நடிகைகள் ஸ்வேதா மேனனும், ஆஷா சரத்தும் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து நடிகை மணியம் பிள்ளை ராஜு போட்டியிட்டார். இதில் ஆஷா சரத் தோல்வி அடைய மற்ற இருவரும் துணை தலைவராக வெற்றி பெற்றார்கள்.
11 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர். இதில் டொவினோ தாமஸ், லால், பாபுராஜ், லேனா, மஞ்சு பிள்ளை, சுதீர் கரமனா, ரச்சனா நாராயண் குட்டி, சுரபி லட்சுமி, டினிடோம், உன்னி முகுந்தன், லால், விஜய் பாபு ஆகியோர் வெற்றி பெற்றனர். நிவின் பாலி, ஹனிரோஸ் தோல்வியடைந்தனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!