
பாலகிருஷ்ணா டிவி ஷோவில் மகேஷ்பாபு
சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடுகளில் நடிகர்கள் நானி மற்றும் மோகன்பாபு ஆகியோர் கலந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினார்கள். இந்தநிலையில் தற்போது நடிகர் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் அனில் ரவிபுடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இந்த மாலை பொழுதை ரொம்பவே ரசித்து அனுபவித்தேன் என மகேஷ்பாபு கூறியுள்ளார். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்பொது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறதாம். இந்த நிகழ்ச்சி மூலம் மகேஷ்பாபு பற்றி இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!