
விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா காதலை உறுதிப்படுத்தும் பாரிஸ் ட்ரிப்?
மேலும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவரும் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தது, விழாக்களில் ஒன்றாக கலந்துகொண்டது ஆகியவற்றின் மூலம் இவர்கள் இருவருக்குள்ளும் நட்பையும் தாண்டி காதல் மலர்ந்துள்ளதாக கடந்த இரண்டு வருடமாகவே சொல்லப்பட்டு வருகிறது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் விஜய் தேவரகொண்டா, தான் நடித்துவரும் லைகர் படத்தின் படப்பிடிப்பிற்காக பாரிஸ் சென்றார். அதேசமயம் தனது படங்களுக்கு சற்றே ஒய்வு கொடுத்த ரஷ்மிகா, அதே பாரிஸுக்கு டூர் கிளம்பி சென்றார். தற்போது லைகர் படப்பிடிப்பை முடித்து விஜய் தேவரகொண்டா ஊர் திரும்பியுள்ளார்.
இதை தொடர்ந்து ராஷ்மிகாவும் தனது ட்ரிப்பை முடித்து தற்போது ஐதராபாத் திரும்பியுள்ளார். இருவரும் பாரிஸில் சந்தித்துக்கொண்டதாக புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ராஷ்மிகாவின் இந்த தனிப்பட்ட பயணம் அவர்களது காதலை உறுதி செய்வது போலத்தான் இருக்கிறது என டோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்..





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!