
கொடுத்த வாக்கிற்காக குரல் கொடுத்த சிரஞ்சீவி
இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுக்கோ அல்லது படத்தின் கதை சொல்லியாகவோ குரல் கொடுப்பதற்கு நடிகர் சிரஞ்சீவியிடம் பேசி அவரது சம்மதத்தை வாங்கி வைத்திருந்தார் கிருஷ்ண வம்சி.. ஆனால் சமீபத்தில் சிரஞ்சீவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதை தொடர்ந்து அவர் ஒய்வு எடுத்து வருவதால் அவரை டப்பிங் பேச அழைக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்துள்ளார் கிருஷ்ண வம்சி.. ஆனால் சிரஞ்சீவி தானாகவே அந்த விஷயத்தை ஞாபகப்படுத்தியதோடு சொன்னபடி வந்து டப்பிங்கு பேசி கொடுத்துள்ளார். அன்னைய்யாவின் அன்புக்கு ஈடு இல்லை என சிரஞ்சீவியின் இந்த செயல் பற்றி சோஷியல் மீடியாவில் உருகியுள்ளார் கிருஷ்ண வம்சி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!