பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல்
ஆக 21, 2025
Advertisement
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மோகன்லால், மம்முட்டி இருவரும், பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பேட்ரியாட் என்கிற புதிய படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தை விஸ்வரூபம் பட எடிட்டரும் டேக் ஆப், மாலிக் உள்ளிட்ட படங்களின் இயக்குனருமான மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். மேலும் இதில் குஞ்சாக்கோ போபன், நயன்தாரா ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்து விட்டது.
சமீபநாட்களாக நடிகர் மம்முட்டி உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். அவர் மீண்டும் குணம் அடைந்து வர வேண்டுமென அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் பிரார்த்தித்து வந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பர் மற்றும் அவரது தம்பி மூலமாக மம்முட்டி குணமடைந்து விட்டார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் மோகன்லால், மம்முட்டி குணமடைந்த தகவல் கேட்டு உடனடியாக அவருக்கு போன் செய்து விசாரித்துள்ளார்.
அதன்பிறகு மம்முட்டியுடன் பேசியது குறித்து மோகன்லால் கூறும்போது, “அவரது உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தேன். அடுத்த மாதத்தில் அவர் தன்னுடைய வேலைகளுக்கு திரும்புகிறார் என்றும் தற்போது நடித்து வரும் படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பிக்கிறார் என்றும் என்னிடம் கூறினார். நான் இந்த சமீப நாட்களாக எங்கே சென்றாலும் பார்ப்பவர்கள் அனைவரும் என்னிடம் உரிமையாக மம்முட்டியின் உடல்நிலை பற்றி தான் ஆர்வமுடனும் கவலையுடனும் விசாரித்தனர். ஏராளமான மக்கள் அவர் உடல் நலம் தேறி வருவதற்காக பிரார்த்தித்தனர். அந்த வகையில் தற்போது அவர் உடல் நலம் தேறியிருப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!