உதவி இயக்குனருக்காக கெஸ்ட் ரோலில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி
ஜன 10, 2023
Advertisement
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது, தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளது. இந்தப்படத்திற்கு முன்பு இருந்ததைவிட இந்த படத்தின் மூலமாக படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி தற்போது இந்திய அளவில் தெரிந்த மிகப்பெரிய நடிகராகிவிட்டார். இந்தநிலையில் தற்போது கன்னடத்தில் உருவாகி வரும் "ஹாஸ்டல் குடுகாடு பெகாகிட்டரே" என்கிற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
இவர் மட்டுமல்ல கன்னட சினிமாவின் இன்னொரு பிரபல இயக்குனரான பவன்குமார் மற்றும் இன்னொரு நடிகரான ஷைன் ஷெட்டி ஆகியோரும் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ஒரே காட்சியில் வரும் விதமாக நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் கல்லூரியில் முன்னாள் நண்பர்கள் சந்திப்பு குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் காட்சியில் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இவர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த படத்தை இயக்கி வரும் நிதின் கிருஷ்ணமூர்த்தி லூசியா உள்ளிட்ட படங்களில் இயக்குனர் பவன் குமார் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். “இரண்டு மாபெரும் இயக்குனர்களுடன் பணியாற்றி விட்டு தற்போது அவர்களே என்னுடைய படத்தில் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டது மிகப்பெரிய சந்தோஷம். இவர்களது வருகை இந்த படத்திற்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை கொண்டு வந்துள்ளது” என்று சந்தோஷத்துடன் கூறுகிறார் நிதின் கிருஷ்ணமூர்த்தி.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!