ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து
மார் 31, 2025
Advertisement
மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான "எல் 2 எம்புரான்". கடந்த 2019ல் வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணியில் உருவாகி இருந்தாலும் கூட லூசிபர் படம் வெளியான போது எந்தவித சலசலப்பும் ஏற்படவில்லை.
அதே சமயம் தற்போது வெளியாகி உள்ள இதன் இரண்டாம் பாகத்தில் இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளது கடந்த இரண்டு நாட்களாக மிகப்பெரிய பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது. படத்தின் நாயகன் மோகன்லாலே இதற்காக வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மோகன்லாலை வைத்து தொடர்ந்து ராணுவ பின்னணி கொண்ட படங்களாக இயக்கி வந்த இயக்குனர் மேஜர் ரவி தற்போது புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது, “மோகன்லால் பொறுத்தவரை அவர் எப்போதுமே ரிலீஸுக்கு முன்பு தனது முழு படத்தையும் பார்க்கும் வழக்கம் கொண்டவர் அல்ல. தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசுவதோடு மட்டுமே அவர் தனது பணிகளை நிறைவு செய்து விடுகிறார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் படத்தில் எம்புரான் படத்தில் அவர் இடம்பெறும் மொத்த காட்சிகளே ஒரு மணி நேரம்தான் இருக்கின்றன. அதனால் மீதி என்ன காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து அவரது கவனத்திற்கு வராமல் போய் இருக்கலாம். அப்படி அவர் முழு படத்தையும் பார்த்து இருந்தால் நிச்சயம் இது போன்ற காட்சிகளை அனுமதித்திருக்கவே மாட்டார்” என்று கூறியுள்ளார். மோகன்லாலுக்கு ஆதரவாக அவர் வெளியிட்டுள்ள இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!