
யாரும் பேசுவதில்லை
கணேஷ்பாபு பேட்டி: தாயின் கருவறையில் உள்ள பிறக்கப் போகும் தம்பிக்காக சிறுமி கதை சொல்லிக் கொண்டிருக்ககிறாள். தாயோ குடும்ப சூழல் காரணமாக கருவை கழிவறையில் கழுவி தள்ளுகிறாள். இப்படி ஒரு காட்சி கருவறை படத்திற்காக படமாக்கப்பட்டுள்ளது. இதில் கதை சொல்லும் சிறுமியாக நடித்த அஞ்சனா தமிழ்செல்வியும் கருவிலேயே களையப்பட இருந்தவர்.
கருக்கலைப்பை மையமாக கொண்ட இப்படத்தின் கதை என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இன்று நம் நாட்டில், குழந்தையின்றி அவதிப்படும் லட்சக்கணக்கானோர் உள்ளனர் அதேவேளையில், குழந்தையை அநாயசமாக கலைக்கவும் செய்கின்றனர். கருக்கலைப்பு என்பது 10ல் 7 பேர் வாழ்க்கையில் நடந்துள்ள விஷயமாக உள்ளது. ஆனால் இதை யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை. கருக்கலைப்பால் உடல் மற்றும் மனரீதியாகவும் பலர் பாதிக்கின்றனர். இன்று வீட்டுக்கு வீடு, கருக்கலைப்பு பிரச்னை உள்ளது. ஆனால் அது வெளிப்படையாக பேசுவதில்லை" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!