
விவாகரத்து அறிவிப்புக்கு பின் பெயரை மாற்றிய சமந்தா
கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இதற்கிடையில், நாகசைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்தன. இந்த சர்ச்சை முதன் முதலாக எழுந்த காரணம் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தன் பெயருக்கு பின்னால் இருந்த "அக்கினேனி " என்ற பெயரை நீக்கிவிட்டு தன் பெயரின் முதல் எழுத்தான வெறும் "S" என்று மட்டும் வைத்து இருந்தார். அப்போதில் இருந்தே சமந்தா விவாகரத்து சர்ச்சை வைரலானது.
மேலும், வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நாக சைதன்யா - சமந்தா ஜோடி தங்களின் நான்காவது திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில் சமந்தா - நாகசைதன்யா இருவரும் விவகாரத்து செய்தியை அறிவித்து அதிர்ச்சி அளித்தனர். இந்த நிலையில் விவாகரத்து பின்னர் சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் தனது பெயரை ,மாற்றி "சமந்தா " என்று தன் பெயரையே வைத்து உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!