
பிரபல மலையாள பாடகி நஞ்சியம்மா தமிழில் அறிமுகமாகும் சீன் நம்பர் 62
பிரபல மலையாள பாடகி நஞ்சியம்மா சீன் நம்பர் 62 திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஐயப்பனும் கோஷியும் படத்தில் அவர் பாடிய கலக்காத... பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்து யூடியூபில் 4 கோடி பார்வைகளை நெருங்கி வருகிறது.
சீன் நம்பர் 62 திரைப்படத்திற்காக உயிரோட்டமுள்ள பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார். மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பாடல் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிக் பாஸ் புகழ் ஆஜீத் காலிக்கும் இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். திரைப்படத்துறை குறித்து தமிழில் ஏற்கனவே படங்கள் வெளியாகி உள்ள போதிலும், இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக்களத்தில் உருவாகி வருகிறது, திகில் கலந்த கிரைம் திரில்லரான "சீன் நம்பர் 62".
"ஆதாம்" திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த "ஆதாம்" சமரின் இயக்கத்தில் வளர்ந்து வரும் "சீன் நம்பர் 62" திரைப்படத்தை வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பவன்புத்ரா பிலிம் புரொடக்ஷனின் நிகில் ஆர் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார். பௌதிஷ், அமல்தேவ், கோகிலா கோபால், ஜாய்ஸ் எலிசபெத், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நாயர் மற்றும் ராகந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல் மற்றும் பொள்ளாச்சியில் சீன் நம்பர் 62" படமாக்கப்பட்டுள்ளது.
தமிழில் "இரட்டையர்" மற்றும் தெலுங்கில் ஓய் இடியட் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிகேவி, "சீன் நம்பர் 62"-க்கு இசை அமைக்கிறார். விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார். "சதுரங்க வேட்டை", "பாம்பு சட்டை", "ஜோதி" மற்றும் டைரி ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளரான எஸ் ஆர் ராஜா சேதுபதி "சீன் நம்பர் 62"-ன் எடிட்டர் ஆவார். பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை "மிரட்டல்" செல்வா மற்றும் ஹைப்ரிட் களரி அர்ஜுன் வடிவமைத்துள்ளனர். கலை இயக்கத்தை டி.கே.தினேஷ்குமார் கையாண்டுள்ளார்.
அன்சாரி இஸ்மாக் ஒப்பனையையும், சோஹிப் ஜயி உடைகளையும், விளம்பர வடிவமைப்பை சரோவ்வும் கையாண்டுள்ளனர். ரஜீஷ் பதம்குளம் மற்றும் ரினீஷ் திட்ட வடிவமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார். ரசிகர்களை கவரும் பல்வேறு அம்சங்களோடு "சீன் நம்பர் 62" விரைவில் வெளியாகவுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!