
சமந்தாவிற்கு கிடைத்த ஆசீர்வாதம்
இந்தநிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் வளர்த்து வரும் இரண்டு செல்ல நாய்க்குட்டிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. ஹாஷி- ஷாஷா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இரண்டு நாய்களும் சகோதர பாசத்துடன் பழகி வருவதாக தெரிவித்துள்ள சமந்தா, இத்தனை சீக்கிரம் இந்த இரண்டு நாய்களும் நன்றாக பழகி சேர்ந்து இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த இரண்டு நாய்களும் சகோதர பாசத்துடன் பழகி வருவதே எனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன். அதோடு, இந்த இரண்டு நாய்களுமே ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதாவது புதிய விசயங்களை கற்றுக்கொடுத்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார் சமந்தா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!