
உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியில் இணையும் வடிவேலு
கே.எஸ்.அதியமான் இயக்கத்திலும், ஆர்டிகிள் 15 இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் உதயநிதி நடித்து வருகிறார். அரசியல் பணிகள் அதிகம் இருப்பதால் தற்காலிகமாக நடிப்புக்கு பிரேக் விட்டுள்ளார்.
மாரி செல்வராஜின் படத்துடன் நடிப்பை கைவிட அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. உதயநிதிக்காக பா.இரஞ்சித்தும் துருவ் விக்ரம் படத்தை தள்ளி வைக்க உடன்பட்டிருப்பதாக உள்வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்து அறிவிப்பு வரலாம்.
இந்நிலையில் இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தான் உதயநிதியை நேற்று நடிகர் வடிவேலு சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் இதன் பின்னணியில் இவர்கள் இணைந்து நடிப்பதற்கான சந்திப்பும் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!