
பொங்கலுக்கு தள்ளிப்போன ‛வலிமை : ‛பீஸ்ட் படத்துடன் மோதல்
ஆயுத பூஜைக்கு வருமா, தீபாவளிக்கு வருமா என பட வெளியீடு பற்றியும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். நாளை படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் விதமாக வலிமை பற்றிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். அதன்படி, ‛‛வலிமை படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகிறது என மகிழ்ச்சி உடன் தெரிவிக்கிறேன் என டுவிட்டரில் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தீபாவளி போட்டியில் ஏற்கனவே உள்ள ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு படங்கள் உடனான மோதலை தவிர்த்துள்ளனர். அதேசமயம் 2022 பொங்கல் போட்டியில் விஜய்யின் பீஸ்ட் படம் உள்ளது. இதன்மூலம் விஜய், அஜித் படங்கள் மீண்டும் ஒரு முறை மோத தயாராகி வருகின்றன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!