
இடி முழக்கம் படப்பிடிப்பு நிறைவு
குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்தி நேற்றுடன் முடித்துள்ளார்கள். அது பற்றி படத்தின் நாயகன் ஜிவி பிரகாஷ்குமார், “இடிமுழக்கம்" படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது.திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமி சாருக்கு நன்றி,” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதற்கு சீனு ராமசாமி, “ஆணவம் இல்லாத அறிவு
“தாய்மொழிப் பற்று
தன்னை ஒப்புவித்து
ஒத்துழைத்த கலை எளிமை
இசையோடு கூடிய
தமிழறிவு
என் கலை மீதான
அன்பு
இவையெல்லாம் உங்கள்
பக்கம் எனை ஈர்த்தது
"வெற்றித்தமிழன்"
என்றே உங்களை
அழைக்க விழைகிறேன்
துணை வரட்டும்
என் தாய் மீனாட்சி
வாழ்த்துகள் தம்பி” என பதிலளித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னி குவிக்கிற்கு மலர் மாலை மரியாதை செய்து இடிமுழக்கம் குழுவினர் தங்களது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!