
கடைசி கட்ட படப்பிடிப்பில் வீரமே வாகை சூடும்
தற்போது அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் "வீரமே வாகை சூடும்" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் ஆரம்பமானது. ஐதராபாத்தில் தொடர்ச்சியாக படப்பிடிப்புகளை நடத்தினார்கள். இப்போது படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாவதாக விஷால் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்குப் பிறகு அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் தன்னுடைய 32வது படத்திலும் தொடர்ந்து நடிக்க உள்ளார் விஷால். இப்படத்தின் பூஜை விஷால் பிறந்தநாளான கடந்த மாதம் ஆகஸ்ட் 29ம் தேதியன்று நடைபெற்றது.
ஒரு படத்தை முடிக்கும் தருவாயில் அடுத்து ஒரு புதிய படத்தை ஆரம்பிக்கும் முறையை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டார் விஷால். "எனிமி, வீரமே வாகை சூடும், விஷால் 32" என அடுத்தடுத்து விஷால் படங்கள் வெளியாக உள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!