
ஷங்கர் - ராம்சரண் படத்திற்கு வசனம் எழுதும் விவேக்
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாடி ராசாத்தி, அடியே அழகே என மென்மையான பாடல்களை எழுதிய விவேக் அதன் பிறகு ரஜினிக்கு மரண மாஸ், விஜய்க்கு சிம்டாங்காரன் என அதிரடியான பாடல்களை எழுதி ரசிகர்களிடம் பிரபலமானார். இந்தநிலையில், திரைக்கதை உருவாக்கம் மற்றும் வசனம் எழுதுவது என தனது எல்லையை விரிவுபடுத்தி உள்ளார் விவேக். அது இயக்குனர் ஷங்கர் படத்தின் மூலமாக நிறைவேறி இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள விவேக், இந்த படத்தில் பணியாற்றும் ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றது என கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!