
ஹீரோயின் ஆனார் சாய் பிரியா
இது குறித்து சாய் பிரியா கூறியிருப்பதாவது: எனது தாத்தா தமிழ்நாட்டின் முதல் திரையரங்கான முருகன் டாக்கீஸ் (மிண்ட், சென்னை) உரிமையாளர் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு. நான் வளரும்போது திரைப்படங்களின் ஈர்ப்பு மட்டுமல்லாது, பார்வையாளர்கள் படங்களை எப்படி ரசிக்கிறார்கள் என்பதையும் பார்த்தே வளர்ந்தேன்.
இது பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு வாங்க வேண்டும் என்கிற ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. அப்படியாகத்தான் நடிப்பு துறையை என் தொழிலாக நான் தேர்ந்தெடுத்தேன் . முதலில் சினிமாவில் நடிப்பதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை. ஆனால் என் ஆர்வத்தை கண்டு, என்னை புரிந்துகொண்டு, பின்னர் எனக்கு ஆதரவளித்தனர். நான் நடிப்பை முறையாக கற்றுக்கொண்டு மாடலிங் செய்து என்னை படிப்படியாக தயார் செய்து கொண்டேன்.
யுத்த சத்தம் படத்திற்காக ஆடிஷன் அழைப்பு வந்தபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். என்னால் முடிந்தளவு மிக சிறப்பாக ஆடிஷனில் நடித்து காட்டினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, நான் தான் இப்படத்தின் நாயகி என்ற தகவல் கிடைத்தது. இந்த சிறந்த வாய்ப்புக்காக எழில் சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!