
வெப் தொடரில் மனோ பாலாவின் வித்தியாச தோற்றம்
"சதுரங்க வேட்டை" "பாம்பு சட்டை" உள்ளிட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது மனோ பாலா வித்தியாசமான தோற்றத்தில் முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்து இருக்கிறார். மிஸ்டர் உத்தமன் என்று பெயர் வைத்து இருக்கும் இந்த வெப் தொடரை நிஷாந்த் லோகநாதன் இயக்கி இருக்கிறார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் சச்சின் நாச்சியப்பன் நடிக்கிறார். இவர் நயன்தாராவுக்கு தம்பியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்தார். யூடியூப், விளம்பர படங்களில் நடித்த பிரணிகா தக்ஷு இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மிஸ்டர் உத்தமன் வெப் தொடர் காதல், காமெடி, பேண்டஷி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். இந்த வெப் தொடர் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் ஸ்டே டியூன் என்ற யூடியூப்பில் வெளியாக இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!