
வடிவேலு மீண்டும் களம் இறங்கும் நாய் சேகர் தலைப்புக்கு சிக்கல்
காமெடி நடிகர் சதிஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பில் புதிய படம் உருவாகி உள்ளது. அந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் தலைப்பு வைத்துள்ளார்களாம். படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிடும் போது படத்தின் தலைப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனனர். ஆனால் வடிவேலு தன்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று வடிவேலு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாய் சேகர் என்ற தலைப்பை அந்த நிறுவனம் பதிவு செய்திருக்கின்றனர். எனவே வடிவேலு, அந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அந்தப் படத்தின் கதைப்படி தலைப்பு மிக முக்கியமாக இருப்பதால் மறுத்து விட்டார்களாம். படத்தில் ஒரு நாய் முக்கியக் கதாபாத்திரத்தில் இருப்பதால் படத்தின் தலைப்பு அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!