
லாபம் படத்தைப் புறக்கணிக்கும் ஸ்ருதிஹாசன்?
இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு கடந்த வருடம் கொரோனா முதல் அலை ஊரடங்கு தளர்வின் போது கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற போது படப்பிடிப்பில் கட்டுப்பாடுகளை மீறி நிறைய பேர் கலந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி படப்பிடிப்பிலிருந்து இயக்குனரிடம் தெரிவிக்காமல் வெளியேறினார் ஸ்ருதிஹாசன். அதன்பின் அவர் சம்பந்தப்பட்ட ஓரிரு காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியிருந்ததால் அதை எப்படியோ சமாளித்தார்கள் என்று சொல்லப்பட்டது.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்த போது கூட அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்தார் ஸ்ருதிஹாசன். ஆனாலும், சில மாதங்களுக்கு முன்பு "லாபம்" படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான "யாமிலி யாமிலியா" என்ற பாடலை வெளியிட்ட போது படக்குழுவினர் யாரும் சமூக வலைத்தளங்களில் ஸ்ருதிஹாசன் பெயரைக் குறிப்பிடவில்லை.
ஆனால், இரு தினங்களுக்கு முன்பு படத்தின் மூன்றாது சிங்கிள் பாடலான "கிளாரா மை நேம் இஸ் கிளாரா" என்ற பாடலை வெளியிட்ட போது ஸ்ருதிஹாசன் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்கள். ஒரு வேளை அப்பாடலை ஸ்ருதிஹாசனே பாடியிருந்ததால் "டேக்" செய்திருப்பார்கள். இருந்தாலும், அப்பாடலை தனது சமூக வலைத்தளங்கள் எதிலும் ஸ்ருதிஹாசன் ஷேர் செய்யவேயில்லை.
தனக்கு என்ன நஷ்டம் வந்தாலும், ஒட்டு மொத்தமாக "லாபம் படத்தை புறக்கணிக்க ஸ்ருதிஹாசன் முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!