
இலவச வினியோகம் - தியேட்டர் உரிமையாளர்களை சமாதானம் செய்யும் சூர்யா
இந்நிலையில் இந்த படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இலவச விநியோக உரிமை என்ற முறையில் திரையரங்குகளுக்கு, படத்தை தயாரித்த 2டி நிறுவனம் கொடுக்கவுள்ளது. அதாவது படத்தை திரையிட்டு மொத்த வசூலையும் திரையரங்குகளும் திரையரங்கு அதிபர் சங்கமும் எடுத்துக் கொள்ளலாம். தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் உடன்பாடு ஏற்பட்டு இந்த வாரத்திலேயே படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
முன்னதாக ஓடிடியில் தொடர்ந்து சூர்யா நடித்த, தயாரித்த படங்கள் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யா மீது அதிருப்தியில் இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. திரையரங்குகளுக்கு ரசிகர்களை மீண்டும் இழுக்க சூரரைப்போற்று உதவலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!