
த பேமிலி மேன் 2 சர்ச்சை : மன்னிப்பு கேட்ட சமந்தா
தற்போது ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இத்தொடர் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா, “மக்களுக்கென இருக்கும் சொந்த கருத்துக்களை நான் அனுமதிக்கிறேன். அந்தக் கருத்தில் அவர்கள் அப்படியே தொடரும் பட்சத்தில் மற்றவர்களின் சென்டிமென்ட்டை காயப்படுத்துவதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படி ஏதாவது ஒன்றை நான் வேண்டுமென்றே செய்வதாக அவர்கள் நினைக்கக் கூடாது என்பதற்காக எனது மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. அப்படி நடந்திருந்தால் மிகவும் வருந்துகிறேன்.
ஆனால், தொடர் ஒளிபரப்பானதும் பல சத்தங்கள் நின்றுவிட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வளவு ஒன்றும் மோசமாக இல்லை என்று சிலர் சொன்னதையும் பார்த்தேன். இன்னும் தங்களது கருத்தைத் தொடரும் மக்களுக்கு எனது மன்னிப்பு,” என்று கூறியுள்ளார்.
அதே சமயம், "த பேமிலி மேன் 2" தற்போது தமிழ், தெலுங்கில் வெளியாகி உள்ளதாலும், தமிழில் அடுத்தடுத்து சமந்தா நடித்துள்ள படங்கள் வெளிவர உள்ளதாலும் அவர் இப்படி மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இந்த மன்னிப்பை சமந்தா இத்தொடர் வெளியான போதே கேட்டிருந்தால் அவர் மீதான மதிப்பு கூடியிருக்கும் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!