
தமிழ் சினிமா முன்னணி இயக்குனர்கள் ஆரம்பிக்கும் தயாரிப்பு நிறுவனம்
ஓடிடி தளங்கள் தங்களைப் போன்ற இயக்குனர்களை நம்பி இருக்கின்றன என்பதை உணர்ந்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் சிலர் ஒன்றிணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் மேனன், மிஷ்கின், சசி, வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோர் இணைந்து "ரெயின் ஆன் பிலிம்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கப் போகிறார்களாம்.
அந்த நிறுவனம் மூலம் திரைப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவைகளைத் தயாரிக்க உள்ளார்களாம். முதல் தயாரிப்பை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட இயக்குனர்களில் சிலர் ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருபவர்கள். சிலர் ஆரம்பித்து பெரும் நஷ்டம் அடைந்தவர்கள்.
வேறு எந்த திரையுலகிலும் இப்படி ஒரு முயற்சி நடந்ததில்லை. இந்த நிறுவனம் சிறப்பாக நடந்தால் அது மற்ற திரையுலகினருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!