சிவகார்த்திகேயனை விட்டுவிட்டு விஜய்யை டிக் செய்த இளம் இயக்குனர்
ஆக 18, 2021
Advertisement
கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் தேசிங்கு பெரியசாமியை போனில் அழைத்து பாராட்டிய ஆடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. மேலும் தனக்காகவும் ஒரு கதை தயார் செய்யுமாறு அந்த போன் காலில் கூறியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்திடம் ஒரு கதையைக் கூறியுள்ளார் என்கிறார்கள்.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி விஜய்யிடம் ஒரு படத்தின் கதையை கூறவே அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே ரஜினியை அடுத்து அவர் விஜயுடன் கூட்டணி அமைக்க அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்கும் படம் தள்ளி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!