
கடைசி கட்டப் படப்பிடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல்
"நானும் ரௌடிதான்" படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில் சமந்தாவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் "சாகுந்தலம்" தெலுங்குப் படத்தில் நடித்து முடித்த சமந்தா, புதுச்சேரிக்கு இப்படத்தின் படப்பிடிப்புக்காக வந்துள்ளார்.
கடந்த வருடக் கடைசியில் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்தது. கடந்த ஆறு மாதங்களாக கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நடக்கவில்லை. இப்போது கடைசி கட்டப் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான "ரெண்டு காதல்" காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. 17 மில்லியன் பார்வைகளை அந்தப் பாடல் யு டியூபில் கடந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த அப்டேட்களைத் தர உள்ளார்களாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!