தனுஷின் 45வது படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது
ஆக 10, 2021
Advertisement
கார்த்திக் நரேன் இயக்கும் தனது 43வது படமான மாறன் படத்தில் நடித்து முடித்துவிட்ட தனுஷ், அடுத்தபடியாக மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தில் அவருடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இது தனுஷின் 44ஆவது படமாகும்.
இந்நிலையில் தெலுங்குப்பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தான் நடிக்கயிருந்த மூன்று மொழிப்படத்தை அடுத்த ஆண்டுக்கு தனுஷ் தள்ளிவைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படம் மூன்று மொழியில் உருவாவதோடு ஆரம்ப கட்ட பணிகள் இப்போது தான் தொடங்கப்பட்டிருப்பதால் இந்த வேலைகளை சேகர் கம்முலா முடிப்பதற்குள் மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துவிட திட்டமிட்டுள்ளாராம்.
அதன்காரணமாக சேகர் கம்முலாவுடன் தனுஷ்இணையும் அவரது 45ஆவது படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாம்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!