
யாஷிகாவுக்கு வனிதா ஆறுதல்
இந்நிலையில் யாஷிகாவுக்கு அறிவுரை கூறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். அதில் "டார்லிங் இது யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். எனவே தான் நாம் இதை விபத்து என்கிறோம். ஜனனம் மற்றும் மரணம் இரண்டும் முன்பே தீர்மானிக்கப்பட்டது. யாரும் அதை மாற்ற முடியாது. எனவே நீயும் விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளாய். உனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சம்பவத்திற்கு உன்னை நீயே குற்றம் சொல்வதை முதலில் நிறுத்து. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நினைப்பதை நிறுத்திவிடு. உன் மனசாட்சியை உறுதியாக வைத்துக் கொள். மற்றவற்றை நீயே கவனித்துக் கொள்ளலாம். இந்த கோர விபத்தில் இருந்து நீ தப்பித்து இருக்கிறாய் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!