
காளிதாஸை வரவேற்கும் விக்ரம் லோகேஷ் கனகராஜ்
கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கமல்ஹாசன் மகனாக நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
அதை தற்போது படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார். “மிகவும் திறமைசாலியான காளிதாஸை எங்களது ஆக்ஷன் கிளப்பிற்கு வரவேற்கிறோம்,” என பாராட்டி அழைத்துள்ளார்.
"ஒரு பக்கக் கதை" படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான காளிதாஸ் மலையாளப் படங்களில் முத்திரை பதித்தாலும் தமிழில் சரியான ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார். அப்படியான வாய்ப்பாக "விக்ரம்" படம் அவருக்குக் கிடைத்திருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!