
யாரைத் திட்டுகிறார் எனிமி தயாரிப்பாளர்?
தனது டுவிட்டரில் அடிக்கடி அரசியல் கலந்த பதிவுகளையும் பதிவிடுபவர் வினோத்குமார். இன்று காலை அவரது டுவிட்டரில், “பின்னால் அசிங்கமாகப் பேசிவிட்டு, முன்னால் அன்பைப் பரப்புபவர்களை, மக்கள் வழிபடுகிறார்கள்,” என யாரையோ குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இன்று தனுஷ் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நாளில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான உண்டர் பார் பிலிம்ஸில் ஆல் இன் ஆலாக இருந்தவர் தான் வினோத் குமார். தனுஷுடன் சண்டையிட்டுத்தான் அவரை விட்டு பிரிந்தார் என்பது கோலிவுட்டின் தகவல்.
ஆனால், இன்று தனுஷின் பிறந்தநாளுக்கு வினோத் எந்த வாழ்த்தும் சொல்லவில்லை. அதே சமயம், தனுஷின் 43வது படப் போஸ்டரை ரிடுவீட் செய்துவிட்டு அப்படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படத்தையும் வினோத் தயாரித்து வருகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!