
அஜித்துக்கு நன்றி சொல்லும் சார்பட்டா வில்லன் ஜான்
படத்தில் யாராலும் வீழ்த்த முடியாத குத்துச்சண்டை வீரராக வில்லத்தனமான கதாபாத்திரத்தில் ஜான் கொக்கேன் என்பவர் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர் "பாகுபலி 1, வீரம்" ஆகிய படங்களில் நடித்துள்ளார். "சார்பட்டா" படத்தில் "வேம்புலி" என்ற கதாபாத்திரத்தில் இவரது நடிப்பிற்கு கிடைத்து வரும் பாராட்டுக்களால் பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளார்.
அந்த மகிழ்ச்சியில் நடிகர் அஜித்திற்கும் சேர்த்து நன்றி தெரிவித்துள்ளார். “நன்றி அஜித் சார். என்னை நானே நம்புவதற்கு தல அஜித் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பார். "வீரம்" படத்தின் போது உங்களுடன் செலவிட்ட நாட்கள் எனது வாழ்க்கைக்குப் பாடமாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கவும், சிறந்த மனிதனாக இருப்பதற்கும் நீங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறீர்கள். "வேம்புலி" கதாபாத்திரத்தை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் சார். லவ் யூ சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!