
திருமணத்தை போன்றே விவாகரத்தும் புனிதமானது: சுவாசிகா
இரண்டு பேர் மகிழ்ச்சியோடு வாழத்தான் திருமணம் செய்து கொள்கின்றனர். தாங்கமுடியாத பிரச்சினைகள் வரும்போது விவாகரத்து செய்து கொள்வது சிறந்த வழியாகும். தற்கொலை செய்து கொள்வது கொடுமையானது.
விவாகரத்தும், திருமணம்போன்று புனிதமானதுதான். அது ஒரு புதிய வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குகிறது. பெண்கள் மோசமான வாழ்க்கைக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரச்சினைகள் வரும்போது சரியான முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுவாசிகா தமிழில் கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, சோக்காலி, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!