
பழங்குடி மாணவர்களுக்கு தொடர்ந்து நிதி திரட்டும் மாளவிகா மோகனன்
அந்தவகையில் கேரளாவில் வயநாடு பகுதியை சேர்ந்த பழங்குடி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கற்பதற்கு வசதியாக மொபைல் போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றை வாங்குவதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்து சோஷியல் மீடியா மூலமாக நிதி திரட்ட ஆரம்பித்தார் மாளவிகா மோகனன். ரசிகர்களும் ஆர்வமாக முன்வந்து உதவி செய்தனர்.
தற்போது அந்த மாணவர்களுக்கு 8 டேப்லெட்டுகள், 7 ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார் மாளவிகா. மேலும் அந்த மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு இன்டர்நெட் வசதியையும் ஏற்படுத்தி தர விரும்பியுள்ள மாளவிகா மோகனன். அதற்காகவும் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!