
பண்ணையார் மகளாக காஜல் அகர்வால்
கிராம மக்களின் நலனுக்காக அவர் ஒரு விஷயம் செய்யப்போய் அது விபரீதத்தில் முடிகிறது. அதன் தொடர்ச்சியை அவர் இப்போதைய காலகட்டத்தில் தொடர்வாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து இயக்குனர் டீகே கூறியதாவது: இது புராணக்கதை அல்ல. அடிப்படையில் பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்ட ஒரு கதை. இந்த படத்தில் பார்வையாளர்கள் வித்தியாசமான காஜலைப் பார்க்க முடியும். அவருடைய தோற்றம் கூட மிகவும் வித்தியாசமானது, அந்தக் கால ஜமீன்தார்களின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து காஜலின் கேரக்டரை செதுக்கினோம். பொள்ளாச்சியில் படமாக்கப்பட்ட அவரது பகுதிக்கென்று ஒளிப்பதிவு, இசை எல்லாவற்றையும் வித்தியாசப்படுத்தி இருக்கிறோம். என்கிறார் இயக்குனர் டீகே.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!