
ஓடிடி-யில் வெளியாக உள்ள நரகாசூரன்
கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கல் தான் அதற்குக் காரணம். தனது படம் வெளிவராமல் போனது குறித்து பல விதமான கமெண்ட்டுகளைக் கொடுத்தார் கார்த்திக் நரேன். அதன்பின் படத்திலிருந்து முழுமையாக விலகினார் கவுதம் மேனன்.
எப்படியோ ஒரு வழியாக சிக்கல்கள் எல்லாம் முடிந்து தற்போது சோனி லிவ் ஓடிடி இப்படத்தை வாங்கியுள்ளதாம். நேற்று "வாழ்" படம் மூலம் தனது முதல் நேரடி வெளியீட்டை ஆரம்பித்த அந்த நிறுவனம் அடுத்து "நரகாசூரன்" படத்தை நேரடி வெளியீடாக ஆகஸ்ட் 13ம் தேதி வெளியிட உள்ளதாம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள்.
கார்த்திக் நரேன் தற்போது தனுஷ் நடிக்கும் 43வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் தற்போது சில சர்ச்சை எழுந்து வருகிறது. விரைவில் அது வெளியில் வெடிக்கலாம் என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!