
அண்ணாத்த படப்பிடிப்பு : கோல்கட்டாவில் ரஜினிகாந்த்
ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமானது. கொரோனா இரண்டாவது அலையின் போதும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.
அதன்பின் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இங்கு சில நாள் ஓய்விற்குப் பிறகு மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவற்றை முடித்து விட்டு சென்னை திரும்பினார். இரண்டு நாட்களுக்கு முன்பு மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசி, தனது அரசியல் பிரவேசத்தின் விட்ட குறை தொட்ட குறையையும் முடித்து வைத்தார். தனது ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
அந்த சூட்டோடு படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார். திரும்பி வந்த பின் அவரது புதிய படங்களின் அறிவிப்பு வெளியாகும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!