
அடுத்தடுத்த ஓடிடி வெளியீட்டில் ஆர்யா
இதுவரையில் ஓடிடியில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் என்று பார்த்தால் சூர்யாவின் "சூரரைப் போற்று", மாதவன் நடித்த "சைலன்ஸ்", ஜெயம் ரவி நடித்த "பூமி", ஆர்யா நடித்த "டெடி" ஆகிய மூன்று படங்களைச் சொல்லலாம்.
ஆர்யா நடித்த "டெடி" இந்த ஆண்டு மார்ச் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்தப் படத்திற்கு சிறுவர், சிறுமியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படத்தைத் தொடர்ந்து ஆர்யா நடித்துள்ள அடுத்த படமான "சார்பட்டா பரம்பரை" படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படம் ஜுலை 22ல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஆர்யா நடித்துள்ள இரண்டு படங்கள் அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாவது குறிப்பிட வேண்டிய ஒன்று. தியேட்டர்களுக்குப் படம் போகவில்லை என்றாலும் ஓடிடியில் படங்கள் வெளியாவதால் ஆர்யாவுக்கு ரசிகர்களிடத்தில் எளிதில் சென்று சேர வாய்ப்பாக அமைந்துவிட்டது.
ஆர்யா அடுத்து "அரண்மனை 2, எனிமி" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!