
அஞ்சான் இயக்குனருக்குக் கிடைத்த அசத்தல் பாராட்டு
சமீபத்தில் கூட "ஜகமே தந்திரம்" படம் வெளிவந்த போது கூட ரஜினிகாந்திற்கு "பாபா", விஜய்க்கு "சுறா", சூர்யாவுக்கு "அஞ்சான்" போல தனுஷுக்கு "ஜகமே தந்திரம்" என சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தார்கள்.
"அஞ்சான்" தோல்வியிலிருந்து மீண்டு "சண்டக்கோழி 2" படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தாலும் அப்படமும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் எப்படியோ தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.
இன்று அப்படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ராம். டுவிட்டரில், “கடைசி கட்ட கதை முடிந்தது. எப்படி... லிங்குசாமி சார் லவ் யூ, சூப்பர் டூப்பர் கிக்டு....நான் சொல்றேன் கேமராவை ரோல் பண்ணுங்க,” என பெரும் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க "உப்பெனா" நாயகி கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!